இலங்கை செய்தி

தடுப்பு காவலை எதிர்த்து சலே ரிட்மனு: நவம்பர் 27 இல் பரிலீசனை

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிக்க அனுமதி வழங்குவது பற்றி நவம்பர் 27ஆம் திகதி அறிவிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிக்க அனுமதி வழங்குவது பற்றி நவம்பர் 27ஆம் திகதி அறிவிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, சுரேஷ் சாலே இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான வாய்மொழி வாதங்களை நேற்று நிறைவு செய்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இதனை அறிவித்துள்ளது.

சாலே சார்பில் முன்னிலையான அதிபர் சட்டவாளர் சஞ்சீவ ஜெயவர்தன, நீண்டவாதங்களுக்குப் பிறகு தனது பதில் வாதங்களை நேற்று நிறைவு செய்தார்.

தங்கள் எழுத்துப்பூர்வ வாதங்களை ஒக்டோபர் 20-ஆம் நாளுக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் இரண்டு தரப்பினருக்கும் உத்தரவிட்டது.

இடைக்கால நிவாரணக் கோரிக்கைகள் மீதான தனது தீர்ப்பையும் நவம்பர் 27 ஆம் திகதி வழங்குவதாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை