ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் கடும் வெப்பம்! இறப்புகள் ஏற்படலாம்!!

பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு   சுகாதாரப் பாதுகாப்பு முகமை (UKHSA) வெப்ப எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று முதல் வரும் 27 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும்.

மெட் அலுவலகத்தின் அறிவிப்பின்படி, லண்டன், தென்கிழக்கு, கிழக்கு மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற  எச்சரிக்கைகளும், இங்கிலாந்தின் மற்ற பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

லண்டனில் வெப்பநிலை 30°C வரை உயரும் என்றும், ஞாயிற்றுக்கிழமை தெற்கு இங்கிலாந்தில் 33°C-ஐத் தாண்டக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது 1922-ல் பதிவான  மே மாத  வெப்பநிலையான 32.8°C-ஐ மிஞ்சக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால்  சுகாதார மற்றும் சமூக சேவைகளில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படும் எனவும், இறப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!