ஐரோப்பா

பிரித்தானியாவில் இருந்து 60,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!

வெப்பமான வானிலை காரணமாக, நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் பிரான்ஸில் இருந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஏறக்குறைய 394 பேர் இங்கிலாந்தை வந்தடைந்துள்ளார்.

அதேநேரம் அரசாங்கம் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த பல வழிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கடந்த ஆண்டு இங்கிலாந்தின் நிகர இடம்பெயர்வு சுமார் 171,000 ஆகக் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதமரின் தலைமைச் செயலாளர் டேரன் ஜோன்ஸ் ( Darren Jones), “நாங்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.

நிச்சயமாக இன்னும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன, அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 60,000 புகலிடக் கோரிக்கையாளர்கள் நிராகரிக்கப்பட்டு அல்லது நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இதுவரை இங்கிலாந்திற்கு மக்களை அழைத்து வரும் படகுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ஆனால், இந்த முன்னேற்றம் தொடர்வதை உறுதிசெய்ய, இந்தக் குற்றக் கும்பல்களைக் கையாள்வது உட்பட, நமது பிரெஞ்சு கூட்டாளிகள் மற்றும் பிறருடன் இணைந்து நாம் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்