ஆஸ்திரேலியா செய்தி

பழைய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டு வியூகம் அமைக்கும் ஆஸ்திரேலியா

  • May 31, 2026
  • 0 Comments

ஆக்கஸ் (AUKUS) ராணுவ ஒப்பந்தத்தின் கீழ் ஆஸ்திரேலியா பெறவுள்ள அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அனைத்தும் அமெரிக்க கடற்படையிடம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள (Second-hand) நீர்மூழ்கிக் கப்பல்களாகவே இருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற பாதுகாப்புத் துறை தலைவர்களின் உயர்மட்ட மாநாட்டில் (Shangri-La Dialogue) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” ஆக்கஸ் (AUKUS) முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியா இரண்டு பழைய நீர்மூழ்கிக் கப்பல்களையும், ஒரு […]

உலகம் செய்தி

‘ஆபரேஷன் சிந்தூர்’- இந்தியாவின் வலிமையை வெளிப்படுத்தியது!

  • May 31, 2026
  • 0 Comments

தெற்கு ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கின்றது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் Pete Hexathon தெரிவித்துள்ளார். இந்தியா கடந்தாண்டு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் பலத்தை உலக நாடுகள் அறியக்கூடியதாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார். ஆசிய-பசிபிக் பாதுகாப்பு உச்சி மாநாடு, சிங்கப்பூரில் உள்ள ஷாங்க்ரி-லா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் 44 ஆசிய-பசிபிக் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், ராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இங்கு உரையாற்றுகையிலேயே […]

உலகம் கல்வி

கடுமையான பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் எச்சரிக்கை!

  • May 31, 2026
  • 0 Comments

ஈரான்மீது தொடுக்கப்படும் எந்தவொரு ஆக்கிரமிப்பு முயற்சிக்கும் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். ஈரானின் எல்லைப்பகுதிகளை நோக்கி எடுக்கப்படும் எந்தவொரு பகைமை நடவடிக்கையையும் முந்தைய தாக்குதல்களை விடவும் பலமடங்கு ஆற்றலுடன் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஈரானிய இராணுவம் எதிரிகளின் சவால்களை முறியடிக்க உறுதியுடனும் முழு பலத்துடனும் நிலைபெற்றுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார். நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் பாரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!

  • May 31, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் பாரிய அளவிலான தரைவழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எல்லையோரக் குடியிருப்புகளுக்கு நிலவும் நேரடி அச்சுறுத்தல்களை நீக்குவதையும், ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்புகளை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இஸ்ரேலியப் படைகள் ஏற்கனவே Litani ஆற்றைக் கடந்து முன்னேறியுள்ளதோடு, Nabatieh போன்ற வடக்கு நோக்கி அமைந்துள்ள பகுதிகளுக்கும் தங்கள் தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளன. தற்காப்பு வளையத்தை வலுப்படுத்தவும் தீவிரவாத ஊடுருவல்களைத் தடுக்கவும் கூடுதல் ராணுவ வீரர்கள் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் […]

அரசியல் இலங்கை செய்தி

ஹர்ஷ டி சில்வாவுக்கு நிதி அமைச்சு பதவி?

  • May 31, 2026
  • 0 Comments

“நிதி அமைச்சு பதவியை பெறுவதற்காக கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்துடன் இணையவுள்ளார் என வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. அவர் ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே பயணிப்பார்.” இவ்வாறு ஐமசவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “நிதி அமைச்சு பதவியை பெறுமாறு ஹர்ஷ டி சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப்பட்டாலும் அதனை ஏற்கும் நிலைப்பாட்டில் அவர் இல்லை. ரணில் விக்கிரமசிங்க […]

செய்தி விளையாட்டு

IPL சாம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா RCB?

  • May 31, 2026
  • 0 Comments

ஐபிஎல் கிரிக்கெட் 2026 போட்டி தொடரில் இறுதி ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி மற்றும் 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் 2-வது முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் களமிறங்குகின்றன. லீக் சுற்றில் ஆர்சிபி அணி முதலிடம் பிடித்து அசத்தியிருந்தது. தொடர்ந்து தகுதி சுற்று 1-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ஓட்டங்கள் […]

இலங்கை செய்தி

சுற்றுலாத் துறையில் இலங்கை சாதனை: சர்வதேசப் பட்டியலில் 18-வது இடம்!

  • May 29, 2026
  • 0 Comments

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் இலங்கை, சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியுள்ளது. அத்துறையில் தனக்கென தனித்துவமான இடத்தை தக்கவைத்துள்ளது. இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா ஊடகமான TTW – Travel and Tour World வெளியிட்டுள்ள “2026 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த 50 பாரம்பரிய சுற்றுலாத் தலங்கள்” என்ற மதிப்புமிக்க சர்வதேசப் பட்டியலில் இலங்கை 18-வது இடத்தைப் பிடித்துள்ளது. மேற்படி சர்வதேசப் பட்டியலில் இந்தியா, பிரான்ஸ், பெரு, ஸ்பெயின் மற்றும் எகிப்து போன்ற நாடுகள் முன்னிலை […]

இலங்கை செய்தி

ஆளுங்கட்சி அரசியல் பிரமுகரின் மைத்துனர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

  • May 29, 2026
  • 0 Comments

திருகோணமலையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர் ஒருவரின் மைத்துனர், ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே 25 வயதான இவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த நபரை சோதனையிட்டபோது அவரிடம் இருந்து 2045 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

யாழில் மீனவர்கள் மாயம்: தேடுதலை தீவிரப்படுத்துமாறு அமைச்சர் பணிப்பு!

  • May 29, 2026
  • 0 Comments

யாழ். பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (27) இரவு சுமார் 11 மணியளவில் இரண்டு படகுகளில் கடலுக்கு சென்ற குறித்த மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் நேற்று முதல் கடுமையான காற்று வீசிவருவதால், அவர்கள் பயணித்த படகுகள் கரைக்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் […]

இலங்கை செய்தி

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி விஷமருந்தி தற்கொலை முயற்சி: நுவரெலியாவில் பரபரப்பு!

  • May 29, 2026
  • 0 Comments

நுவரெலியா மேல் நீதிமன்றத்தால், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் இன்று (29.05.2026) நண்பகல் 12.30 மணியளவில், HC/NE/17/2020 என்ற இலக்கமுடைய கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய, சந்தேக நபரான உடபுஸ்ஸல்லாவ, தொடம்வத்த பகுதியைச் சேர்ந்த 44 வயது நபர் குற்றம் புரிந்துள்ளார் என்பதை உறுதிப்படுத்திய பின், அவருக்கு மரண தண்டனை […]