முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் ஜனாதிபதி அழைப்பு
இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே அதிகளவிலான ஒற்றுமையும் கூட்டுறவும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், பிராந்தியத்தின் பாதுகாப்பை அனைத்து முஸ்லிம் நாடுகளும் இணைந்து கூட்டுப் பொறுப்புடன் நிர்வகிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும், பிற நாடுகளின் தலையீட்டிற்கு இடம் தராமல், தமது பகிரப்பட்ட நலன்களை அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம் நாடுகள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். டெஹ்ரானில் நடைபெற்ற 40-வது சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே […]













