நேபாளத்துக்கு நிவாரணப் பொருட்கள், மருந்துகளை அனுப்பியது இந்தியா
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் 37.5 தொன் நிவாரணப் பொருட்களையும், மருந்துகளையும் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
முதற்கட்டமாக நேற்று 10 தொன்எடையுள்ள நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து இந்திய விமானப்படை தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, இந்திய வான்படை விரைந்து செயல்பட்டு ‘சி-130ஜே’ (C-130J) விமானம் மூலம் 10 டன் நிவாரண மற்றும் மருத்துவப் பொருட்களை அனுப்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
மேலும், ‘சி-17’ மற்றும் ‘சி-130’ விமானங்கள் மூலமாக கூடுதல் நிவாரணப் பொருட்களை அனுப்பவுள்ளதாகவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இன்று இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்துகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.




