இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் 'இந்தியா டுடே - சி வோட்டர்' அமைப்பு நடத்திய 'மூட் ஆப் தி நேஷன்' (Mood of the Nation) கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றித் கழகத்தின் தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? கருத்து கணிப்பில் விஜய் முன்னிலை

  • August 28, 2026
  • 0 Comments

இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ அமைப்பு நடத்திய ‘மூட் ஆப் தி நேஷன்’ (Mood of the Nation) கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றித் கழகத்தின் தலைவருமான விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு அரசியல் கட்சி தொடங்கி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே, தேசிய அரசியலில் பல […]

சீன, ரஷ்ய ஜனாதிபதிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி இந்தியா செய்தி

சீன, ரஷ்ய ஜனாதிபதிகளை சந்திக்கிறார் பிரதமர் மோடி

  • August 28, 2026
  • 0 Comments

ஆகஸ்ட் 31-ம் திகதி கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் நடை​பெறும் எஸ்​சிஓ உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கிறார். இதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், சீன ஜனாதிபதி ஜி ஜின்​பிங்கை அவர் சந்​தித்​துப் பேசு​வார் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பிரதமர் நரேந்​திர மோடி நாளை உஸ்​பெகிஸ்​தான் தலைநகர் தாஷ்கண்ட் செல்​கிறார். அங்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஷவ்​கத் மிர்சியோயேவை அவர் சந்​தித்​துப் பேசுகிறார். அப்​போது வர்த்தகம், முதலீடு, பாது​காப்​பு, டிஜிட்​டல் தொழில்​நுட்​பம், எரிசக்தி, கல்வி ஆகிய துறை​களில் […]

வாஷிங்டன் தனது கவனத்தை தனது சொந்தப் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புச் சவால்கள் பக்கம் திருப்புவதால், ஐரோப்பாவைப் பாதுகாப்பதில் தங்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நிரூபிக்க வேண்டும் என்று நேட்டோ (NATO) அமைப்பிலுள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு பென்டகன் வியாழக்கிழமை அழுத்தம் கொடுத்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஐரோப்பாவின் பாதுகாப்பை பொறுப்பேற்கவும்: நேட்டோ நாடுகளுக்கு பென்டகன் அழுத்தம்

  • August 28, 2026
  • 0 Comments

வாஷிங்டன் தனது கவனத்தை தனது சொந்தப் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புச் சவால்கள் பக்கம் திருப்புவதால், ஐரோப்பாவைப் பாதுகாப்பதில் தங்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நிரூபிக்க வேண்டும் என்று நேட்டோ (NATO) அமைப்பிலுள்ள அமெரிக்க நட்பு நாடுகளுக்கு பென்டகன் வியாழக்கிழமை அழுத்தம் கொடுத்துள்ளது. ஐரோப்பாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தனது படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க அமெரிக்கா ஏற்கனவே தொடங்கியுள்ளது. தற்போதும் அங்கு சுமார் 80,000 வீரா்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் இந்தப் படைக்குறைப்பை எந்த அளவிற்கு ஆழமாகக் கொண்டுசெல்ல […]

நவீனமயப்படுத்தப்படும் யாழ்.கொழும்புத்துறை இறங்குதுறை குறித்து அமைச்சர் ஆராய்வு இலங்கை செய்தி

நவீனமயப்படுத்தப்படும் யாழ்.கொழும்புத்துறை இறங்குதுறை குறித்து அமைச்சர் ஆராய்வு

  • August 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இறங்குதுறையை அகலப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார். கடற்றொழிலாளர்களின் தேவைகளை கருத்திற்கொண்டு, இறங்குதுறை வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் தற்போதைய பணிநிலை மற்றும் எதிர்கால கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கேட்டறிந்தார். இத்திட்டத்திற்காக ரூ.205 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் நிறைவடையும் […]

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன், ஆஸ்திரேலியா பேச்சு நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று  ஆஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge)  வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: நீதிகோரி ஆஸ்திரேலிய செனட் சபையில் ஒலித்த குரல்

  • August 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன், ஆஸ்திரேலியா பேச்சு நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று  ஆஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge)  வலியுறுத்தியுள்ளார். “இலங்கைக்கு இது புதியதொரு கதையல்ல. நாடு முழுவதிலும் உள்ள சுமார் 20 மனிதப் புதை குழிப் பகுதிகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) ஆவணப்படுத்தியுள்ளது. ஆனால் அவற்றில் ஒன்று கூட இதுவரை முழுமையாக விசாரணை செய்து முடிக்கப்படவில்லை” என செனட்டர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச […]

நேபாளம் மற்றும் சீனா கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லைப் பகுதியில், இமயமலை ஆற்றில் ஏற்பட்ட பிரம்மாண்ட பாறை மற்றும் சேறு சரிவு காரணமாக உருவான பேரழிவு வெள்ளத்தில் 390-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உலகம் செய்தி

392சடலங்கள் மீட்பு: 1,500 பேர் தொடர்ந்து மாயம்

  • August 28, 2026
  • 0 Comments

நேபாளம் மற்றும் சீனா கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லைப் பகுதியில், இமயமலை ஆற்றில் ஏற்பட்ட பிரம்மாண்ட பாறை மற்றும் சேறு சரிவு காரணமாக உருவான பேரழிவு வெள்ளத்தில் 390-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 1,500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை அன்று மீட்புக் குழுவினர் சேற்றில் இறங்கித் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேபாளத்தில் மட்டும் குறைந்தபட்சம் 392 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்டை பிராந்தியமான திபெத்தில் குறைந்தது மூன்று பேர் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘ஐரோப்பாவில் நடந்த கொடூர இனப்படுகொலை’- போர்க்குற்றவாளி Ratko Mladic ஐ.நா.சிறையில் காலமானார்

  • August 27, 2026
  • 0 Comments

போஸ்னியப் போரின் (1992-1995)போது இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக வாழ்நாள் சிறைத்தண்டனையை எதிர்நோக்கிவந்த போஸ்னிய செர்பிய முன்னாள் படைத்தளபதி ரட்கோ ம்லாடிச் (Ratko Mladic) தனது 84வது வயதில் காலமானார். நெதர்லாந்தின்  Hague நகரிலுள்ள ஐ.நா சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். ஸ்ரெப்ரெனிக்கா இனப்படுகொலை 1995- ஆம் ஆண்டு ஐ.நா-வால் ‘பாதுகாக்கப்பட்ட பகுதி’ என அறிவிக்கப்பட்ட ஸ்ரெப்ரெனிக்காவில் 8,000-க்கும் மேற்பட்ட போஸ்னிய முஸ்லிம்கள் மற்றும் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இவரே பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளார். […]

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷா Sonal Dinusha விளாசிய அபார சதத்தின் உதவியுடன் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. செய்தி விளையாட்டு

சோனல் தினுஷா அபார சதம்: தோல்வியிலிருந்து தப்பியது இலங்கை

  • August 27, 2026
  • 0 Comments

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் சோனல் தினுஷா Sonal Dinusha விளாசிய அபார சதத்தின் உதவியுடன் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி ‘ followed-on’ பெற்ற போதிலும், 2வது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்களின் சவால்களை முறியடித்து 5வது நாள் ஆட்டத்தின் இறுதியில் போட்டியை இலங்கை அணி வெற்றிகரமாக சமநிலையில் முடிவடைந்தது. தனது 5வது டெஸ்ட் போட்டியில் மட்டுமே […]

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை செய்தி

காணிகோரி யாழ்.தையிட்டியில் இன்றும் போராட்டம்

  • August 27, 2026
  • 0 Comments

யாழ். தையிட்டியில் அமைந்துள்ள விகாரையினால் சுவீகரிக்கப்பட்ட தமது சொந்தக் காணிகளை மீளக் கையளிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை எவ்வித தாமதமுமின்றி உரிய காணி உரிமையாளர்களிடம் உடனடியாக மீள வழங்க வேண்டும் என வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தொடர்ச்சியாக இப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று புதன்கிழமை மாலையில் ஆரம்பித்த இந்தப் […]

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது. இலங்கை செய்தி

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா (photos)

  • August 27, 2026
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது. பிரதம குரு சிவஶ்ரீ பாலேந்திரா ஐயா தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 12.20 மணியளவில் பக்தர்கள் புடைசூழ கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற திருவிழாக்களின் உச்சமாக, இன்று காலை 8.30 மணிக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், சந்நிதி வேலவன் காலை 9.40 மணியளவில் […]