19 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் ஸ்ரேயா
நடிகர் ரஜினி நடித்துவரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயாவும் நடிக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. சிவாஜி படத்துக்கு பிறகு தற்போதே அவர் ரஜினியுடன் நடிக்கின்றார்.
திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
அதில் நடிகை பூர்ணா நடனம் ஆடியிருந்தார். இப்படத்துக்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் 3-ம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.
இதையொட்டி நடிகை ஸ்ரேயா, ரஜினியுடன் இருக்கும் புகைப் படத்தை சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, ‘ஹாப்பிடே’ என கூறியுள்ளார். இதனால் அவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனம் ஆட இருப்பதாகவும் தெரிகிறது. ஸ்ரேயா, ‘சிவாஜி’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்திருந்தார். அப்படம் வெளியாகி 19 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.





