செம்மணியில் இதுவரை 412 எலும்புக் கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட தடயவியல் அகழ்வாய்வுப் பணிகளின் 31ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன. நேற்றைய தின அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக அடையாளம் காணப்பட்ட 7 மனித என்புத் தொகுதிகளும் முறைப்படி சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. இதில் 3 மனித என்புத் தொகுதிகள் ஒரே நேரில் (ஒரே நேர்கோட்டில்) புதைக்கப்பட்டவாறு […]













