அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை கைவிடோம்: அரசு திட்டவட்டம்

புதிய அரசமைப்ப இயற்றுவது என்பது ஒரு நீண்டகால வழிமுறையாகும் என்றும், தற்போதைய அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற் கொண்டே 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாகவும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

புதிய அரசமைப்ப இயற்றுவது என்பது ஒரு நீண்டகால வழிமுறையாகும் என்றும், தற்போதைய அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற் கொண்டே 22ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படுவதாகவும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

புதிய அரசமைப்பு மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு ஆகிய இரண்டிற்குமே மக்களுக்குத் தெளிவான ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (05) உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

“புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்கும், தற்போதைய அரசமைப்பில் மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கும் மக்கள் எமக்கு முழுமையான ஆணையை வழங்கியுள்ளனர்.

புதிய அரசமைப்பு ஒன்றினை உருவாக்குவது என்பது நீண்டகால நடைமுறையாகும்; அதனை அவசரகதியில் உடனடியாகச் செய்து முடித்துவிட முடியாது. ஆனால், உடனடியாகச் செய்யப்பட வேண்டிய அத்தியாவசிய விடயம் என்பதாலேயே தற்போது இந்த அரசமைப்பு மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

கிணற்றில் இருந்து நீரை அள்ளி ஊற்றி அணைக்கும் அளவிற்குத் தீ பரவல் ஏற்படும் போது, தீயணைப்புப் படைப் பிரிவு வரும்வரை பார்த்துக் கொண்டு காத்திருக்க முடியுமா? எனவே, தற்போது அரசமைப்பு மறுசீரமைப்பு நடத்தப்பட்டாலும், எமது அரசாங்கம் நிச்சயம் புதிய அரசமைப்பு ஒன்றை நிச்சயமாகக் கொண்டுவரும்.

நீதித்துறையின் சுயாதீனம் பாதுகாக்கப்படும்:
குறிப்பிட்ட தனிநபர்களை இலக்கு வைத்து இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்படவில்லை. அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையையும் இரண்டு வருடங்களுக்கு நீடிப்பதே எமது முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

எமது இந்தத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் எவையும் தர்க்கரீதியானவை அல்ல. எத்தகைய விமர்சனங்கள் வந்தபோதிலும் எமது பயணம் தொடரும்” என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை