எல்லை மீறுகிறது ஈரான்: பிரிட்டன் உட்பட 22 நாடுகள் கடும் கண்டனம்!
ஈரான், மேற்கத்திய நாடுகளில் மேற்கொண்டு வரும் வன்முறைச் செயல்களையும் , அச்சுறுத்தல்களையும் கண்டித்து அமெரிக்கா , பிரிட்டன் 22 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சதித்திட்டங்களை அரங்கேற்றுவதற்காக, சர்வதேச மற்றும் உள்ளூர் குற்றவியல் கும்பல்களை ஈரான் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்துவது மிகவும் மோசமான செயல் என்று மேற்படி நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அல்பேனியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், பல்கேரியா, கனடா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பிரான்ஸ், பின்லாந்து, ஜெர்மனி, […]













