அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் பலி!
Palau நாட்டுக் கொடியுடன் பயணித்த Settebello கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் Sarbananda Sonowal இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணை கடல்வழிப் பாதையில் விதிக்கப்பட்டுள்ள முற்றுகையை மீறியதாகக் குற்றம் சாட்டி, புதன்கிழமையன்று அந்த எண்ணெய் கப்பலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் தொடக்கத்தில் மூன்று இந்திய மாலுமிகளைக் காணவில்லை என்றும், 21 இந்தியப் பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் […]













