உணவு ஒவ்வாமையால் 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
திருகோணமலை , கந்தளாய் ஆயிஷா பெண்கள் மகா வித்யாலயத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையானதாலேயே மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவாக அன்னாசிப்பழம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை மஹதிவுல்வெவ பாடசாலையில் உணவு ஒவ்வாமை காரணமாக இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் நேற்று (10) அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த மாணவர்களுக்கு பசும்பால் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.




