உலகம் செய்தி

தாக்குதல்களை உடன் நிறுத்துங்கள்: ஐ.நா. செயலர் அவசர கோரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் தீவிரமடைந்து வருவது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் Antonio Guterres கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய சூழலில் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பது பிராந்திய எல்லைகளைத் தாண்டி உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தற்காலிக போர்நிறுத்த முயற்சிகள் தோல்வியடைந்து, நிலைமை முழுமையான போராக மாறுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்துகிறார்.

எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்திவிட்டு ராஜதந்திர ரீதியிலான தீர்வை நோக்கி நகர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேவையற்ற காரணங்களைக் கூறி அமைதிப் பேச்சுவார்த்தையைத் தள்ளிப்போட வேண்டாம் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் Antonio Guterres உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி