ஐரோப்பா செய்தி

ஈரான்மீது புதிய தடைகளை EU விதிக்க வேண்டும்: இத்தாலி வலியுறுத்து!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க ஈரான் ஒத்துழைக்க மறுத்தால், அந்த நாட்டின் மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டுமென இத்தாலி வலியுறுத்தியுள்ளது.

ஈரான் தனது தவறான போக்கைத் தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என இத்தாலியப் பிரதமர் Giorgia Meloni, நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

G& உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இத்தாலியின் வெளியுறவுக் கொள்கை குறித்த நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

மேலும், இஸ்ரேலிய அமைச்சர் ஒருவரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இத்தாலிக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்கள் மூலம் ஈரானைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இத்தாலியின் தற்போதைய பிரதான நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி