பம்பலப்பிட்டியவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து
பம்பலப்பிட்டியவின் கேஸில் லேன் (Castle Lane) பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றின் நான்காவது மாடியில் உள்ள வீடொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மின் கசிவு (electrical short circuit) காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பம்பலப்பிட்டிய பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்வம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



