புதிய ஸ்மார்ட் ஹோம் ஹப் சாதனத்தை அறிமுகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் நேற்று (13) ‘HomeView’ எனும் புதிய ஸ்மார்ட் ஹோம் ஹப் (smart home hub) சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வீட்டின் மையத் திரையாகச் செயல்படுவதோடு, வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தையும் வழங்குகிறது. 7 அங்குல ‘Liquid Retina’ திரையைக் கொண்ட இந்தச் சாதனம், இசை ஒலிபரப்பு, FaceTime அழைப்புகள், வீட்டுப் பாதுகாப்பு கண்காணிப்பு மற்றும் கைகளைத் தொடாமலே குரல் மூலம் இயக்கும் வசதி (hands-free voice controls) ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழங்குகிறது. […]





