பொழுதுபோக்கு

மிரட்டலான ஆதிபுருஷ் படத்தால் பீதியில் கங்குவா டீம்! யாருடைய தலை தப்பும்??

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 3டி தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் உருவாகும் இப்படம் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்படுவது தான் இதற்கு முக்கிய காரணம்.

அதேபோன்று இப்படத்திற்கான சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமும் வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது.

அப்படி இருந்தும் கூட கங்குவா இப்போது பிரபாஸின் ஆதிபுருஷ் படத்தை பார்த்து கொஞ்சம் பீதியில் இருக்கிறதாம்.

ஏனென்றால் ராமாயண கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படமும் 3டி தொழில்நுட்பத்துடன் தான் உருவாகி இருக்கிறது. மேலும் 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படம் வரும் ஜூன் 16 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அதைத் தொடர்ந்து இப்போது படத்திற்கான பிரமோஷன் வேலைகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலரையும் மிரட்டிய நிலையில் படத்தின் முதல் வார வசூலே இந்திய அளவில் சாதனை படைக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளிவந்துள்ளது.

அதாவது 700 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள ஆதிபுருஷ் முதல் வாரத்திலேயே 1,000 கோடியை தாண்டி விடும் என கூறப்படுகிறது. ஏனென்றால் ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலக அளவில் கவனம் பெற்ற பிரபாஸ் இப்போது பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

பிரபாஸ் ஆதிபுருஷ் படத்திற்காக தன் ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டி இருக்கிறார். அதைத்தொடர்ந்து படமும் எதிர்பார்த்ததை விட நன்றாகவே வந்திருக்கிறதாம்.

இதை வைத்து தான் படக் குழு இத்தனை கோடி வசூலை எதிர் பார்த்து வருகின்றனர். மேலும் இத்துடன் கங்குவா படமும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது. அதனாலேயே அந்த டீம் தல தப்புமா என்ற பயத்தில் இருக்கின்றனர். அந்த வகையில் இப்படம் பாகுபலி நாயகனுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்குமா அல்லது சொதப்பி விடுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content