Consent Preferences
இந்தியா செய்தி

திருபரங்குன்றில் நாளையே தீபம் ஏற்ற வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருபரங்குன்றில் நாளைய தினமே நடுநிலையான ஒருவர் மூலம் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக திருபரங்குன்றில் உள்ள  தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்த நிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இதற்கிடையே உச்சநீதிமன்ற திகதி குறித்த கார்த்திகை தீபத்திருநாளில் உச்சிப்பிள்ளையார் கோவிலில் மட்டும் தீபம் ஏற்பட்டது. ஆனால் தீபத்தூணில் தீபம் ஏற்படவில்லை.

இதனைக் கண்டித்து பலர் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதமன்றத்தின் தீர்ப்பை மீறியது தொடர்பாக நீதிிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பில்,

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை (28.11.2026) தீபம் ஏற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலை முழுவதும் சி.ஆர்.பி.எப். கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு அமைதியை சி.ஆர்.பி.எப். வீரர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், மலையில் உள்ள தர்காவுக்கு பாதுகாப்பு வழங்குவதில் எந்தத் தடங்கலும் இருக்கக் கூடாது என்றும், வலியுறுத்தப்பட்டுள்ளது.

தர்கா, கோவில் பகுதியை வேறுபடுத்த வேலி அமைக்கலாம் என்றும், உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றிய மண்டபத்தில் இருந்து சுடரை எடுத்து சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும், தீபம் ஏற்றும் நேரத்தை ஒய்வு பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் தலைமையிலான குழு முடிவு செய்ய வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் அனைவரும் சென்று தீபம் ஏற்றலாம் என்றும் நீதிபதிகளான  அரவிந்த் குமார், பஞ்சோலி அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பில் பேசிய நீதிபதிகள், 

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்பது பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பு அல்ல. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மீறப்படும்போது, அதைக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கியிருக்க முடியாது. திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் அரசியலமைப்பு சீர்குலைவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாநில அரசும் கோவில் நிர்வாகமும் கூட்டுச் சேர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளன.

இது நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாகவும், துணிச்சலாகவும் மீறிய செயலாகும். கோவில் நிர்வாகம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, நீதிமன்ற உத்தரவுக்குத் தவறான விளக்கம் அளித்து வேண்டுமென்றே செயல்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்த.

அத்துடன் இந்த வழக்கை வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர். அன்றைய தினம் தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட அனைவரும் ஆஜராக வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி