ஐரோப்பா

பாலஸ்தீன அமைப்பு மீதான தடை – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய அனுமதி

  • July 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பயங்கரவாதச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன நடவடிக்கை அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் இந்தத் தடையை உறுதி செய்தது. இருப்பினும் பாலஸ்தீன நடவடிக்கை அமைப்பின் இணை நிறுவனரான ஹுதா அம்மோரிக்கு, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி நடைமுறைக்கு வந்த இந்தத் தடை, பாலஸ்தீன நடவடிக்கை […]

உலகம்

திருநங்கைகளுக்கு ஆதரவான தீர்ப்புகள் இரத்து – உச்சநீதிமன்றம் அதிரடி

  • June 30, 2026
  • 0 Comments

திருநங்கைகள் பெண்களுக்கான  விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான தடையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. இதற்கமைய முன்னதாக மாநில நீதிமன்றங்கள் திருநங்கைகளுக்கு ஆதரவாக வழங்கிய தீர்ப்புகள் இரத்து செய்யப்பட்டதோடு, இடாஹோ (Idaho) மற்றும் மேற்கு வர்ஜீனியாவில் (West Virginia) அமுலில் உள்ள  சட்டங்களை உறுதி செய்துள்ளது. மேலும் அமெரிக்காவில் 25 மாநிலங்களில் இதுபோன்ற சட்ட நடைமுறை அமுலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ட்ரம்ப் நிர்வாகத்தின் கூற்றுக்களோடு ஒத்துப்போகிறது. இடாஹோ மற்றும் மேற்கு […]

உலகம்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – விரிவடையும் ட்ரம்பின் அதிகாரங்கள்

  • June 29, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகாரங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திரமான கூட்டாட்சி அமைப்புகளின் தலைவர்களை ஜனாதிபதி பணிநீக்கம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அவருடைய அதிகாரங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பானது 91 ஆண்டுகால பழைமையான சட்ட விதியை மாற்றியமைத்துள்ளது. அதேநேரம் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் மற்றும் நுகர்வோர் நிதிப் பாதுகாப்புப் பணியகம் உள்ளிட்ட மேலும் பன்னிரண்டு சுதந்திரமான அமைப்புகளுக்கு  குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.  

இந்தியா முக்கிய செய்திகள்

பாலியல் வன்கொடுமையால் கரு உண்டானால் கலைக்கலாமா? மாறும் சட்டமூலம்!

  • April 30, 2026
  • 0 Comments

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமியின் 31 வாரக் கருவைக் கலைக்க உத்தரவிட்டதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. பெண்கள் தங்கள் உடல்கள் குறித்து முடிவெடுக்கும் உரிமையை உறுதிசெய்து, தற்போதுள்ள சட்டங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கருக்கலைப்புக்கான கால வரம்பு (சட்டப்பூர்வ வரம்பான 24 வாரங்கள்) பொருந்தக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது. குடிமக்களின், குறிப்பாக பாதிக்கப்பட்ட சிறுமி […]