Consent Preferences
இந்தியா செய்தி

25 சதவீத வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் இறுதி கட்டத்தை எட்டிய இந்தியா -அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற தொழில்துறை மாநாட்டில் இணையவழியாக உரையாற்றிய அவர், இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தத்தை இறுதிப்படுத்துவதற்குத் தடையாக இருந்த விவகாரங்களில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இதுவரை தீர்க்கப்படாமல் இருந்த நடைமுறைகள் மற்றும் ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் தற்போது வடிவம் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டால் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 17 சதவீதமாகக் கட்டுப்படுத்த அமெரிக்கா முன்வந்துள்ளது. ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் இந்த வரி 25 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் கடந்த பெப்ரவரி மாதம் எட்டப்பட்ட இடைக்கால இணக்கப்பாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் ஜவுளி, மருந்துப் பொருட்கள் மற்றும் பொறியியல் துறை ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கச் சந்தையில் அதிக வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வது இந்தியாவின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. அதேவேளை, அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையில் கூடுதல் அணுகலை வழங்குமாறு வாஷிங்டன் வலியுறுத்தி வருகிறது.

எனினும், இரு நாடுகளுக்கும் இடையில் இறுதி ஒப்பந்தம் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி