Consent Preferences
உலகம்

உலக வல்லாரசாக சீனா இலக்கு – மறுபுறம் வேலைவாய்ப்பு நெருக்கடி

தொழில்நுட்ப ஆதிக்கம், இராணுவ நவீனமயமாக்கல் மற்றும் உலகளாவிய செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் உலக வல்லரசாக உருவெடுக்க சீனா போட்டியிடுகிறது,

ஆனால் சீனாவில் வேலைவாய்ப்பு நெருக்கடி உருவாகி வருகிறது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மின்சார வாகன உற்பத்தி முதல் ஒரு லட்சியமிக்க புவிசார் அரசியல் செயல்திட்டம் வரை, அனைத்து துறைகளிலும் அமெரிக்காவை விஞ்சி வெற்றியடைவதே சீனாவின் முக்கிய இலக்காகும்.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, செப்டம்பர் 2026 நிலவரப்படி சீனாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 5.2 சதவீமாக  இருந்தது.

இதை சீன அரசாங்கம் ஒரு நிலையான தொழிலாளர் சந்தைக்கான சான்று என்று கூறுகிறது.

ஆனால், இந்த புள்ளிவிவரங்கள் மில்லியன் கணக்கான சீனத் தொழிலாளர்களுக்கு, குறிப்பாக வயதான வேலை தேடுபவர்கள் மற்றும் புதிய பட்டதாரிகளுக்கு நடைமுறை ரீதியான உண்மைத்தன்மையில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

வேலையின்மையை அளவிட சீனா பயன்படுத்தும் கணக்கெடுப்பு முறையின்படி, கணக்கெடுப்புக் காலத்தில் ஊதியம் பெறும் அல்லது பகுதி ஊதியம் பெறும் வேலையில் இருந்த எவரும் வேலை செய்பவராக வகைப்படுத்தப்படுகிறார்.

இந்த வரையறை மிகவும் ஆழமான ஒரு சிக்கலை மறைக்கிறது என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதிகாரப்பூர்வ வேலையின்மை விகிதம் பல ஆண்டுகளாக மாறாமல் இருந்தாலும், வேலையின்மை உதவித்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்