ஐரோப்பாவில் இராணுவ ஆக்கிரமிப்பை குறைக்குமாறு புடினிடம் ட்ரம்ப் வலியுறுத்து
ஐரோப்பிய நாடுகள் மீதான ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினிடம் கோரிக்கை விடுத்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்போது புதினுடன் இந்த விடயம் குறித்து விரிவாகக் கலந்துரையாடியதாக ட்ரம்ப் தனது Truth Social சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் விரைவான சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு, ஐரோப்பா முழுவதிலும் ரஷ்யா முன்னெடுக்கும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்துவது அவசியம் எனத் தாம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்த மோதலில் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருவதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஐரோப்பாவின் எந்தெந்தப் பகுதிகளில் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டும் என்பது தொடர்பில் அவர் குறிப்பிட்ட விளக்கமெதனையும் வழங்கவில்லை.
இதற்கிடையில், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான கடுமையான கருத்து முரண்பாடுகள் பெரும் தடையாக இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.




