இலங்கை செய்தி

இலங்கை ஏற்றுமதியில் 4.3% வளர்ச்சி – 5.78 பில்லியன் டொலர் வருவாய்

2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருவாய் சுமார் 5.78 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது.

இந்த வருவாய் அதிகரிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 4.3% வளர்ச்சியென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் இலங்கை 1.38 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருவாயைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 6% வளர்ச்சியென ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது.

இதில் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டும் முக்கிய பங்கு வகித்துள்ளன.

அந்த மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி 9.87% உயர்ந்து 1.06 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை சேவைத் துறை ஏற்றுமதி சுமார் 317 மில்லியன் டொலராக பதிவாகியுள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில், பொருட்கள் ஏற்றுமதி 4.8% உயர்ந்து 4.52 பில்லியன் டொலராகவும், சேவை ஏற்றுமதி 1.26 பில்லியன் டொலராகவும் பதிவாகியுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை