இலங்கை

உலகின் மிக வேகமாக முன்னேறி வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 04 ஆம் இடம்

சர்வதேச நிதி நிறுவனத்தால் (IIF) உலகின் மிக வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது

2026 ஆம் ஆண்டின் IIF முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி, உலகளவில் மிக வேகமாக முன்னேறி வரும் நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

வியட்நாம் முதலிடத்திலும், பெலிஸ் இரண்டாம் இடத்திலும், மொசாம்பிக் மூன்றாம் இடத்திலும் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளர் உறவுகள் ஆகிய துறைகளில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக IIF சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கடன் வெளிப்படைத்தன்மைக்கான உலகளாவிய தரவரிசையில் இலங்கை ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது, நிதி நிர்வாகத்தையும் முதலீட்டாளர் நம்பிக்கையையும் வலுப்படுத்துவதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்