இலங்கை செய்தி

சிவாஜிலிங்கத்துக்கு இறுதி மரியாதை செலுத்த எழுச்சிக் கோலம் பூண்ட வல்வெட்டித்துறை

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்தை இறுதிப் பயணமாக வழியனுப்பி வைப்பதற்காக அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறை நகர் முழுமையான எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்தை இறுதிப் பயணமாக வழியனுப்பி வைப்பதற்காக அவரது சொந்த ஊரான வல்வெட்டித்துறை நகர் முழுமையான எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.

இன்று காலை 10 மணிமுதல் ஆரம்பமாகவுள்ள இறுதி அஞ்சலி நிகழ்வுகளுக்காக, வல்வெட்டித்துறை நகர் இரவிரவாக அந்தப் பகுதி இளைஞர்களினால் மிகச் சிறப்பாகச் சோடிக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு, தமிழ்த் தேசியக் கொடிகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் ஊடக இல்லங்களின் சார்பில் சிவாஜிலிங்கத்தின் நினைவஞ்சலிப் பதாகைகள் நகர் முழுவதும் பெருமளவில் கட்டப்பட்டுள்ளன.

அன்னாரது புகழுடலை வைத்துப் பொதுமக்கள் பூரண சுதந்திரத்துடனும் மரியாதையுடனும் அஞ்சலி செலுத்துவதற்கேற்ப விசேட பந்தல்களும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மண்ணின் மைந்தனை வழியனுப்பி வைக்கும் இன்றைய இறுதி நாளில், வல்வெட்டித்துறை நகர் வர்த்தகர்கள் முழுமையாகக் கடைகளை அடைத்துத் தமது மரியாதையைச் செலுத்தவுள்ளனர்.

காலை 7 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (கல்றோட் வீதி, நெடியகாடு) ஆரம்பக் கிரியைகள் இடம்பெறுகின்றன.

காலை 10 மணியளவில் வல்வெட்டித்துறை நகரில் விசேடமாக அமைக்கப்பட்ட இடத்தில் சிவாஜிலிங்கத்தின் புகழுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுவதுடன், அரசியல் பிரமுகர்களின் அஞ்சலி உரைகளும் இடம்பெறவுள்ளன.

அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வல்வெட்டித்துறை – ஊறணி இந்து மயானத்தில் அன்னாரது தகனக்கிரிகைகள் உணர்வுபூர்வமாக நிறைவேற்றப்படவுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை