இந்தியா செய்தி

இந்தியாவில் சத் பூஜை கொண்டாட்டம்: மன்னிப்பு கோரினார் டெல்லி முதல்வர்

இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற சத் பூஜை கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால் தம்மை மன்னித்துக்கொள்ளுமாறு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற சத் பூஜை கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால் தம்மை மன்னித்துக்கொள்ளுமாறு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், அடுத்த ஆண்டு இதைவிடச் சிறப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

சத் பூஜை விழாவின் இறுதி நாளான இன்று (16), டெல்லி ஐ.டி.ஓ. காட் பகுதியில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டு, உதய சூரியனுக்கு வழிபாடு செய்து அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட ரேகா குப்தா,

“பூர்வாஞ்சல் பகுதி மக்களிடம் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். சத் மகாபர்வ விழா ஆன்மீகச் சிறப்புடனும் பிரமாண்டமாகவும் நடைபெறுவதற்கு எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம்.

இருப்பினும், ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். அடுத்த ஆண்டு இதைவிடச் சிறந்த ஏற்பாடுகளைச் செய்வதற்கு முயற்சிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சத் பூஜை விரதத்தைக் கடைப்பிடிக்கும் பெண்களின் பக்தியையும் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.

36 மணித்தியாலங்கள் நீர்கூட அருந்தாமல் விரதம் இருந்து, சூரிய பகவான் மீது ஆழ்ந்த நம்பிக்கையுடனும் குடும்பத்தின் நலனுக்காகவும் வழிபாடுகளில் ஈடுபடும் பெண்களின் பக்தி போற்றத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சத் மாதாவிடம் அனைவரது குடும்பங்களிலும் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலவவும், மக்கள் வாழ்வில் முன்னேற்றமடையவும் பிரார்த்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாட்டின் அபிவிருத்திப் பயணத்துடன் பாரம்பரிய கலாசார விழுமியங்களையும் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்றும் ரேகா குப்தா வலியுறுத்தியுள்ளார்.

சூரிய பகவானையும் சத் மாதாவையும் வழிபடும் நான்கு நாள் சத் பூஜை விழா, நவம்பர் 13ஆம் திகதி ஆரம்பமாகி இன்று நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு டெல்லி முழுவதும் 1,400 இற்கும் மேற்பட்ட வழிபாட்டுத் துறைகள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி