இலங்கை செய்தி

செம்மணியில் தோண்டத் தோண்ட சிக்கும் எலும்புக்கூடுகள்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 07 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 07 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 5 எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 28ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (18) நடைபெற்றது.

சான்று பொருள்களாக சிறு பாசிமணி துண்டு , கை வளையல், ஆணிகள் ,பிளாஸ்ரிக் என்பவை மீட்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியில் இதுவரையிலான அகழ்வு பணிகளின் போது, 387 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றுள் 367 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளிட்ட குழுவினர், புதைகுழி அகழ்வு பணிகளை நாளை (19) நேரில் பார்வையிடவுள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை