புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து: சுவிட்சர்லாந்து நிகழ்வு ரத்து
சுவிட்சர்லாந்து, ஜெனிவாவில் நாளை (18) நடைபெறவிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் Ishaq Dar தெரிவித்தார்.
BBC Urdu செய்தி பிரிவு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே இணையவழியில் கையெழுத்திடப்பட்டதால்,
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை கைவிட்டுள்ளார் என தெரியவருகின்றது.
இந்தநிகழ்வு திட்டமிட்டபடி நடக்கும் என்று முன்னதாக கூறப்பட்டாலும், பிரதமரின் சமூக ஊடகப் பதிவில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்த நிகழ்வின் மீதான சந்தேகத்தை எழுப்பின.
இந்நிலையிலேயே இந்த நிகழ்வு இரத்து என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் அடுத்தகட்டமாக தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் கையாளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) ஒரு மத்தியஸ்தராகக் கையெழுத்திட்டவர்களில் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.




