இலங்கை செய்தி

‘சர்வதேச கண்காணிப்பு’: செம்மணியில் இன்று போராட்டம்

இன்று 19.06.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குச் செம்மணி அகழ்வாய்வுத் தளம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இந்த மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளை முற்றாக நிராகரித்து, சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நீதியை வலியுறுத்தி இன்று (19) பிற்பகல் செம்மணியில் கவனவீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் இந்தப் போராட்டத்துக்கான அவசர அழைப்பை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் செம்மணி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை தரவுள்ள நிலையிலேயே, அதற்கு முன்னதாகப் பிற்பகல் 2 மணிக்கு இந்த மக்கள் போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டியில் பின்வரும் பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மற்றும் தடயவியல் விசாரணைகளுக்குச் சர்வதேசத் தரப்பினரின் நேரடிப் பங்கேற்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக ஏமாற்றத்தையே அளித்து வரும் இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறைகள் முற்றாக நிராகரிக்கப்படுகின்றன.

சர்வதேச நீதிக்கான கோரிக்கை: மனிதப் புதைகுழிகளுக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் சர்வதேசப் பொறிமுறையூடான நம்பகமான நீதியே பெற்றுத்தரப்பட வேண்டும்.

“செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட இலங்கையின் நீதி அமைச்சர் வருகை தரும் நிலையில்…” என்ற தலைப்பின் கீழ், செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித என்புக் கூடுகளின் புகைப்படங்களைத் தாங்கி இந்த அழைப்புச் சுவரொட்டி வெளியாகியுள்ளது.

அதன்படி, இன்று 19.06.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குச் செம்மணி அகழ்வாய்வுத் தளம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இந்த மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை