மியான்மாரில் இராணுவ ஆட்சியாளர்களின் கோர தாண்டவம் – 50 பேர் உயிரிழப்பு
மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் நேற்று முன்னெடுத்த வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 50 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஷான் மாநிலத்தின் மோ பை Moe Bye கிராமத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றின் மீது இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 35 பேர் படுகாயமடைந்துள்ளதாக மீட்புக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேநேரம் மேற்கு ராகைன் மாநிலத்தின் மிரௌக்-யூ Mrauk-U நகரிலுள்ள குடியிருப்புப் பகுதி மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை (26ஆம் திகதி) மத்திய மியன்மாரின் மக்வே பிராந்தியத்தில் உள்ள இன் யோன் கிராமப் பாடசாலை மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் மாணவர்கள், இளம் துறவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட குறைந்தது 20 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 இராணுவப் புரட்சிக்குப் பின்னர் மியன்மாரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலை புரிந்ததாகச் சர்வதேச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி ஒரு வாரத்திற்குள்ளேயே இக்கொடூர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




