துருக்கியில் உயர்நிலைப் பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு – 08 பேர் காயம்
துருக்கியின் மனிசா மாகாணத்தில் உள்ள உயர்நிலை பாடசாலைக்கு வெளியே துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் 08 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல்தாரியை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, மேலும் துருக்கிய காவல்துறை முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.




