உலகம்

 கலிபோர்னியாவில் இசை நிகழ்வு ஒன்றில் துப்பாக்கிச்சூட்டு – 09 பேர் படுகாயம்

கலிபோர்னியாவில் இசை நிகழ்வு ஒன்றில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் 09 பேர் காயமடைந்துள்ள நிலையில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துலாரே கவுண்ட்டியில்  அமைந்துள்ள  ஸ்ட்ராத்மோ Strathmore  என்ற சிறிய நகரத்திலேயே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது

அடையாளம் குறிப்பிடப்படாத   சந்தேகநபர்கள் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி துப்பாக்கி சூடு குண்டர் கும்பல் தொடர்பானதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் அதிகாரிகள் அது தொடர்பான மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்