இலங்கை

வடக்கு, கிழக்கின் பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் அரசாங்கம் – தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

இந்தியா நிதியுதவி வழங்கத் தயாராக இருந்தபோதிலும், காங்கேசன்துறை (KKS) துறைமுகம் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் விருப்பமின்றி இருப்பதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) தலைவருமான தொல். திருமாவளவன், குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாண பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், இத்தகைய மேம்பாடு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்ற கவலைகளின் காரணமாக, அரசாங்கம் இந்த இரண்டு வசதிகளையும் மேம்படுத்தத் தயக்கம் காட்டுவதாகக் கூறினார்.

கொழும்பை மையமாகக் கொண்ட அரசியல் நலன்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் வணிகர்களும் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களுக்கு நேரடியாகச் செல்வதைத் தடுக்க முயற்சிப்பதாகவும், இதன் மூலம் சர்வதேச வர்த்தகம் மற்றும் வணிக நடவடிக்கைகள் தொடர்ந்து கொழும்பு வழியாகவே நடைபெறுவதை உறுதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

விமான நிலையத்தில் ஓடுபாதை இறங்கு விளக்குகள் இல்லாதது குறித்து அதிர்ச்சி தெரிவித்த அவர், இந்திய உதவி இருந்தபோதிலும் அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடுகள் கூட மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

அத்துடன் இதற்கு உதவ தவறியமைக்காக இலங்கை அரசாங்கம் குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சரிடம் முறைப்படி முறைப்பாடு அளிக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்