ஜார்ஜியாவில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு – ஐவரின் சடலங்கள் மீட்பு
அமெரிக்கா – ஜார்ஜியா மாநிலத்தின் டக்ளஸ் (Douglas) நகரில் உள்ள வீடொன்றில் 05 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்ததையடுத்து, டக்ளஸ் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், அங்கு 05 பேரின் சடலங்களை மீட்டதாகவும் தெரவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




