பிலிப்பைன்ஸில் பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூடு – இரு மாணவர்கள் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸின் ஜாம்போங்காவில் Zamboanga உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூடு இன்று இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் இருவரும் மாணவர்கள் என நகர மேயர் கைமர் அடான் ஒலாசோ Khymer Adan Olaso கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாடசாலை வளாகத்தில் அவசரகால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டின் சூழ்நிலைகள் குறித்த மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை. சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





