உலகம்

பிலிப்பைன்ஸில் பாடசாலையொன்றில் துப்பாக்கிச்சூடு – இரு மாணவர்கள் உயிரிழப்பு

  • August 18, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸின் ஜாம்போங்காவில் Zamboanga உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு இன்று இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் இருவரும் மாணவர்கள் என நகர மேயர் கைமர் அடான் ஒலாசோ Khymer Adan Olaso கூறியுள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாடசாலை  வளாகத்தில் அவசரகால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும்,  அப்பகுதியை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூட்டின் சூழ்நிலைகள் குறித்த மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை. சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

பிலிப்பைன்ஸில் பருவமழை தாக்கம் – 06 பேர் உயிரிழப்பு, இலட்சக்கணக்கானோர் பாதிப்பு

  • August 9, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் பருவமழை மற்றும் வெப்பமண்டலப் புயல்களின் தாக்கத்தால் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 07 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன்  8 பிராந்தியங்களில் உள்ள 110,000 குடும்பங்களைச் சேர்ந்த 382,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்தப் பேரழிவின் காரணமாக 148-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

பிலிப்பைன்ஸில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு

  • June 26, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவான மின்டானோவில் 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 29 கிலோமீட்டர் (18 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தகவல் வெளியிட்டுள்ளது. மின்டானோவின் சில பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டாலும், உயிரிழப்புகள் அல்லது குறிப்பிடத்தக்க சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் நிலநடுக்கத்தின் தாக்கத்தை மதிப்பிட்டு வருவதாகவும்,  ஏதேனும் பின் அதிர்வுகள் ஏற்படுகிறதா […]

உலகம்

பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

  • June 22, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலையொன்றில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தில்  மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸின்  தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. பாடசாலைக்குள் புகுந்த இரு மர்ம நபர்கள்   துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை பொலிஸார் கைது செய்து, விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் அந்த பாடசாலையின் முன்னாள் மாணவர் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு […]

உலகம்

பிலிப்பைன்ஸில் 2,100இற்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் பதிவு – 17 பேர் மாயம்!

  • June 10, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியதை தொடர்ந்து 2,100-க்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் பதிவாகி பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்காரணமாக 600இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் 17 பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அதேபோல் 3,100-க்கும் மேற்பட்ட வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் 100 அரசு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் […]

உலகம்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் : மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ கடற்கரைக்கு அப்பால் பதிவாகிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து  பல ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 15 பேர் பலி! 129 பேர் காயம்!

உலகம்

பிலிப்பைன்ஸில் கட்டுமானத்தளம் இடிந்து விழுந்து விபத்து – 03 பேர் பலி, பலர் மாயம்!

  • May 25, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் வார இறுதியில் கட்டுமானத் தளம் ஒன்று இடிந்து விழுந்ததில் 03 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பம்பாங்காவின் (Pampanga) ஏஞ்சல்ஸ் நகரில் (Angeles City), இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. மீட்பு பணியாளர்கள் இன்றைய தினம் இரண்டு பேரை   மீட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகவும்,  மற்றொருவர் மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தலைமையிலான நூற்றுக்கணக்கான மீட்புப் படையினர், மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

  • May 4, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸின் சமர் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு 10 கி.மீ (6.2 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இதனால் சேதங்களும், அதைத் தொடர்ந்த பின் அதிர்வுகளும் ஏற்படக்கூடும் என பிலிப்பைன்ஸின் நில அதிர்வு ஆய்வு நிறுவனமான ஃபைவோல்க்ஸ் (Phivolcs) எச்சரித்துள்ளது.

இலங்கை

இலங்கைக்குக் கைகொடுத்த பிலிப்பைன்ஸ்!

  • April 22, 2026
  • 0 Comments

இலங்கையில் அண்மையில் டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்கியுள்ளது. இந்த நிதியுதவியை இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா பி. கெய்ங்லெட் (Nina P. Cainglet), இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளதாக தனது எக்ஸ் (X) தளத்தில் அறிவித்துள்ளார். அதில், கடினமான இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் தருணத்தில், பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் இலங்கைக்கு வழங்கிய […]

உலகம்

பிலிப்பைன்ஸில் வெடித்து சிதறிய எரிமலை – நச்சு வாயுக்கள் கசிவு!

  • October 26, 2025
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் (Philippines) உள்ள மணிலாவிலிருந்து (Manila) தெற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தால் எரிமலை (Taal Volcano) தற்போது செயல்பாட்டில் உள்ளது. சுமார் 10 நிமிடங்களுக்குள் இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சாம்பல் உமிழ்வுகள் அல்லது குறுகிய கால வெடிப்புகள் சாத்தியமாகும் என்று பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் நச்சு வாயுக்கள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும்  குறிப்பாக பிரதான பள்ளத்திற்கு அருகிலுள்ள பகுதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. […]