பரபரப்புக்கு மத்தியில் சீனா பறக்கிறார் சவுதி வெளிவிவகார அமைச்சர்
சவுதி அரேபியா வெளிவிவகார அமைச்சர் இளவரசர் Faisal bin Farhan Al Saud, இந்த வாரம் சீனாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi விடுத்த அழைப்பின்பேரிலேயே இவ்விஜயம் இடம்பெறுகின்றது.
செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் அவரது பயணம் இடம்பெறும் என ராஜதந்திர வட்டாங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, சுவிட்சர்லாந்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி அதனைத் தொடர்ந்து தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் கடந்த இரு நாட்களாக ஏற்பட்ட மோதல் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சவுதியின் முக்கிய பிரமுகர், பீஜிங் செல்கின்றார்.



