இந்தியா செய்தி

ஈரான் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் இந்திய குழு அறிவிப்பு

ஜூலை 4 முதல் 9 வரை நடைபெறவுள்ள இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு , ஈரான் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பீகார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கரிட்டா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவர்களுடன் வெளிவிவகார அமைச்சரின் மேலும் சில அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

ஜூலை 4 முதல் 9 வரை நடைபெறவுள்ள இந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு , ஈரான் ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும், மேற்படி திகதிகளில் பிரதமர் மோடி பல நாடுகளுக்கான முக்கியப் பயணமொன்றைத் திட்டமிட்டுள்ளதால், கால அட்டவணை நெருக்கடி காரணமாக அவர் இத்தூதுக்குழுவில் இடம்பெற வாய்ப்பில்லை என்று தெரியவருகிறது.

ஈரான்மீது கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டார்.

கமேனியின் இறுதிச்சடங்கு நடைமுறைகள் ஜூலை 4 அன்று டெஹ்ரானில் தொடங்கி, ஜூலை 9 அன்று அவரது சொந்த ஊரான மஷாத் (Mashhad) நகரில் உடல் அடக்கம் செய்யப்படுவதோடு நிறைவடையும்.

இந்த அடக்க சடங்குகள் மார்ச் மாதமே நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அப்போது தீவிரமாக நடந்து வந்த போர் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி