செய்தி

சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்

சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இன்று ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளன.

இந்நிகழ்வு சவுதி அரேபியாவின் தலைநகர் ஜெட்டாவில் இடம்பெறவுள்ளது.

போர்கள், மோதல்கள் மற்றும் இராணுவப் பதட்டங்கள் அதிகரித்து வரும் சூழலில் ஒப்பந்தம் ஒன்றை எட்ட  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர், வளைகுடா நாடுகளையும் உள்ளிழுத்து, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்தை சீர்குலைத்துள்ளது.

இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் ” நீண்ட காலமாக விவாதத்தில் இருந்தது, ஆனால் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகள் இதை விரைவுபடுத்துகின்றன,” என்று தகவல் அறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

சவூதி அரசாங்கத்திற்கு நெருக்கமான இரண்டாவது வட்டாரமும், பெயர் குறிப்பிட விரும்பாமல், இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவும் பாகிஸ்தானும் ஏற்கனவே 2025-ல் ஒரு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அறிவித்திருந்தன. இஸ்லாமிய உலகின் ஒரே அணு ஆயுத நாடாக பாகிஸ்தான் இருப்பதால், இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி