ஐரோப்பா

போலந்து வான்வெளியில் ஊடுருவிய ரஷ்ய போர் விமானங்கள் – நேட்டோ விமானங்கள் களமிறக்கம்

போலந்து வான்வெளியில் ரஷ்யாவின் போர்விமானங்கள் ஊடுறுவியதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேட்டோ போர் விமானங்கள் அவசரமாக அனுப்பப்பட்டுள்ளன.

KH-101 குரூஸ் ஏவுகணை உட்பட இரண்டு ஏவுகணைகள் மற்றும் ஒரு ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஊடுறுவியதாக சந்தேகிக்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக, தரைவழி வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார் செய்யப்பட்டு, போலந்து வான்வெளியில் இராணுவ விமானங்கள் இயக்கப்பட்டதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவிலிருந்து மூன்று பொருட்கள் எல்லையைக் கடந்ததாக போலந்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்,  இந்த ஊடுருவல்களை ஒரு விபத்து என்பதை விட, ரஷ்யாவின் திட்டமிட்ட ஆத்திரமூட்டல் என்று விவரித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்