பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் வெற்றி
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் மறுசீரமைப்பு ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக டவுனிங் தெரு அறிவித்துள்ளது.
இன்று இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதற்கமைய இளைஞர் பரிமாற்றத் திட்டம், சுகாதார மற்றும் தாவர சுகாதார ஒப்பந்தம், மற்றும் அவற்றின் மாசு உமிழ்வு வர்த்தக அமைப்புகளுக்கு இடையேயான இணைப்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடுவிற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பான விரிவான தகவல்கள் அறிக்கையொன்றின் மூலம் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




