புதிய தாக்குதலுக்கு தயராகும் ரஷ்யா : உளவுத்துறை எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு புதிய பெரிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் உடனான சந்திப்பு குறித்து டெலிகிராமில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், புதிய வான்வழித் தற்காப்பு அமைப்புகளைப் பெறுவது தொடர்பாக உக்ரைன் தனது நட்பு நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகக் கூறினார்.
“உக்ரைன் மீது ரஷ்யா ஒரு புதிய பிரம்மாண்டமான தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதாக உளவுத்துறை தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“உக்ரைனியர்கள் ஒவ்வொரு நாளும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழும்போது”, ரஷ்யா மீதான தடைகளைத் தளர்த்துவது குறித்து எந்த விவாதமும் இருக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
ரஷ்யப் படைகள் நீண்ட காலமாக இரவு நேரங்களில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வந்தன; ஆனால் சமீபத்திய வாரங்களில் தங்கள் உத்திகளை மாற்றி, நாள் முழுவதும் இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




