ஏலத்திற்கு வரும் அரிதான டைட்டானிக் டிக்கெட்
சதாம்டன் (Southampton) துறைமுகத்திலிருந்து டைட்டானிக் கப்பல் புறப்படுவதைப் பார்ப்பதற்காக வழங்கப்பட்ட பார்வையாளர் டிக்கெட் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஏல நிகழ்வானது வில்ட்ஷயரின் டிவைசஸ் (Devizes, Wiltshire) நகரில் இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த டிக்கெட்டானது 50,000 பவுண்டுகள் வரை விற்பனையாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அட்டை எலிசா டிப்டன் (Eliza Dibden) என்பவருக்குச் சொந்தமானது. இவருடைய 18 வயது மகன் வில்லியம், கப்பலில் இரண்டாம் வகுப்புப் பயணியாகப் பயணம் செய்து, அந்தப் பேரிடரில் உயிரிழந்தார். […]



