அதி நவீன ஏவுகணை கொள்வனவு : இந்தியா, ரஷ்யா இடையே ஒப்பந்தம்!
ரஷ்யாவுடன் ஒரு பில்லியன் டொலருக்கும் அதிக மதிப்புடைய ஒப்பந்தம் ஒன்றை இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
ஒந்த ஒப்பந்தப்படி R-37M ரக ஏவுகணைகளை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ளது.
இந்த ஒப்பந்தம் சுமார் 300 ஏவுகணைகளை உள்ளடக்கியது, இதன் மதிப்பு ஏறத்தாழ 1.2 பில்லியன் டொலர் ஆகும்.
இந்த ஏவுகணைகள் இந்தியாவின் எஸ்யு-30எம்கேஐ (Su-30MKI) போர் விமானங்களில் பொருத்தப்படவுள்ளன.
பாகிஸ்தானுடனான மோதல்கள் மற்றும் சீனாவுடனான தற்போதைய பதற்றம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ஆயுதப் படைகளை நவீனமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஏவுகணைகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.





