சிறிய படகுகள் மூலம் இடம்பெறும் ஆட்கடத்தலை தடுக்க பிரான்ஸ் – பிரித்தானியா இடையே ஒப்பந்தம் கைச்சாத்து
ஆங்கிலக் கால்வாய் ஊடாக இடம்பெறும் புலம்பெயர்தலை தடுக்க பிரித்தானிய அரசாங்கம் பிரான்ஸுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. 03 ஆண்டுகள் செயற்படுத்தப்படும் இந்த ஒப்பந்தத்திற்காக 662 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு கடற்கரைப் பகுதிகளில் சிறிய படகுகள் மூலம் இடம்பெறும் ஆட்கடத்தலை தடுப்பதே இதன் நோக்கம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்காக 45 அதிகாரிகளை கொண்ட ஒரு சிறிய பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம், பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பிரெஞ்சு அதிகாரிகளின் மொத்த […]









