உலகம்

ஜோர்டான் மீது ஏவுகணைத் தாக்குதல் – இரு அமெரிக்க வீரர்கள் பலி

  • July 19, 2026
  • 0 Comments

ஜோர்டான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் அந்த இரண்டு வீரர்களும் கொல்லப்பட்டதை, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தற்போது உறுதி செய்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதல்களில் நான்கு அமெரிக்கப் படை வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

ஈரானை மூர்க்கமாக தாக்கிய அமெரிக்கா – 08 இராணுவத்தினர் உயிரிழப்பு

  • July 8, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்க மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 08 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் மீது இன்று இரவு தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட வீரர்கள் விமானப்படை மற்றும் கடற்படையில் பணியாற்றியவர்கள் என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த வீரர்கள் பண்டார் அப்பாஸ் மற்றும் புஷெர் ஆகிய பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.