உலகம்

பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள் போராட்டம்

பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்கள், அவர் மீண்டும் நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தினர்.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது  பொலிஸ் வாகனம் ஒன்றுக்கு தீவைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தான் இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்குத் திரும்புவதற்காக கடவுச்சீட்டு கோரியுள்ளதாகத் தெரிவித்த மறுநாளே, அவரது ஆதரவாளர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே இந்தப் போராட்டங்களுக்கு முன்னதாக, வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பல பயணிகள் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டதாகவும், சில இடங்களில் போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

‘வங்கதேச சத்ர லீக்’ (BCL) எனப்படும் இந்த மாணவர் அமைப்பின் போராட்டங்கள், 2024 ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராகப் பெரும் மக்கள் எழுச்சி ஏற்பட்டு அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அவரது ஆதரவாளர்கள் ஆரம்பித்த முதல் இயக்கமாக காணப்படுகிறது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்