பொழுதுபோக்கு

ஜோதிகா வேண்டாம்.. 28 வயது நடிகையை புக் செய்யும் தளபதி 68 டீம்

லியோ படம் வருகின்ற அக்டோபர் மாதம் ரிலீஸாக உள்ள நிலையில் ரசிகர்கள் தளபதி 68 படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக வைத்துள்ளனர். வெங்கட் பிரபு மற்றும் விஜய் இருவரும் முதல்முறையாக இணைந்துள்ளதால் இந்த படம் எப்படி இருக்கும் என்ற யோசனை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த படத்தின் கதை தயாரான நிலையில் நடிகர் மற்றும் நடிகைகளை படக்குழு தேர்வு செய்து வருவதில் மும்மரம் காட்டி வருகிறார்கள்.

விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் ஜோதிகா சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த நிலையில் கதாநாயகி முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தான் நடித்து வருகிறார்.

மேலும் விஜய்க்கு இப்போது ஜோதிகா செட்டாவாரா என்ற கேள்வியும் இருந்த நிலையில் 28 வயது நடிகையை தளபதிக்கு ஜோடியாக நடிக்க வைக்க உள்ளாராம் வெங்கட் பிரபு.

சிவகார்த்திகேயனுடன் அடுத்தடுத்து கூட்டணி போட்டு பிரபலமடைந்த பிரியங்கா அருள் மோகன் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து இருக்கிறார்.

இப்போது இவருக்கு எக்கச்சக்க பட வாய்ப்பு வந்து கொண இருக்கும் நிலையில் முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு கண்டிப்பாக பிரியங்கா மோகன் மறுப்பு தெரிவிக்க மாட்டார்.

ஆகையால் தளபதி 68 கூட்டணி கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் பிரியங்கா மோகன் மற்றும் விஜய்க்கு கிட்டத்தட்ட 21 வயது வித்தியாசம்.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்