இலங்கை செய்தி

சிறைச்சாலை வன்முறை: உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற தடுப்புக்காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

31 உயிர்களை பலியெடுத்த சிறை வன்முறையின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையிலிருந்து உயிர்பிழைத்த கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வெலிக்கடை சிறைக்குள் செல்ல, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கைதிகள் மாற்றப்பட்ட இடங்களில் பழிவாங்கும் கொலைகள் மற்றும் சித்திரவதைகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தடுப்புக்காவல் நிலையங்களுக்குள் தடையின்றி செல்ல இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கோரியுள்ளது.

நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து பிற சிறைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.

நீண்டகாலமாக அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கங்கள் தவறிவருவது, சிறைக்கைதிகளின் மற்றும் சிறைச்சாலை பணியாளர்களின் உயிர்களை ஆபத்தில் தள்ளுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய பிரதிப் பணிப்பாளர் பாபு ராம் பந்த் வலியுறுத்தியுள்ளார்.

சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வரும் இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க அரசாங்கங்கள் தவறிவருவது, கைதிகளின் மற்றும் சிறைச்சாலை பணியாளர்களின் உயிர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீண்டகால விசாரணைக்கு முன்னரான தடுப்புக்காவல், சிறைகளில் நெரிசல், மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஏராளமானோரை சிகிச்சைக்கு அனுப்பாமல் தடுத்து வைத்தல் ஆகியவை ஐ.நா. அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குறிப்பிடத்தக்க பிரச்சினைகளாகும்.

இலங்கை நீதி அமைச்சு வெளியிட்ட அண்மைய புள்ளிவிவரங்களுக்கு அமைய, சுமார் 10,000 பேரை மாத்திரமே தங்கவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இலங்கையின் சிறைகளில் 41,000-ற்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை